இது கார்வார் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கோயிலை தரிசிக்க அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். ரங்கோலி கலையின் அடையாளமாக இந்த கோயில் கொண்டாடப்படும் ரங்கோலித்திருவிழா மிகப் பிரசித்தமாக அறியப்படுகிறது. இத்திருவிழாவின்போது கோயிலைச்சுற்றியுள்ள பகுதி முழுவதும் பலவிதமான வண்ண அலங்கார வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்படுகின்றன. அச்சமயம் இந்த கோயில் ஒரு ரங்கோலி கலைக்காட்சி கூடம் போன்று காட்சியளிக்கின்றது.
உள்ளூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பல ரங்கோலி படைப்புகளை அப்போது இங்கு வருகை தரும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். பொதுவாக ரங்கோலி படைப்புகளில் கடவுள் உருவங்கள், விளையாட்டு பிரபலங்கள், பிரபல நடிகர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் போன்றவர்களின் உருவங்கள் இடம்பெறுகின்றன.



Click it and Unblock the Notifications