Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கசௌலி » ஈர்க்கும் இடங்கள் » கசௌலி புரூவரி

கசௌலி புரூவரி, கசௌலி

27

1820ம் ஆண்டில் எட்வர்ட் டையர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மதுபான உற்பத்திக்கூடம் உலகிலேயே மிக உயரமான புரூவரி எனும் புகழுடன் கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது.

நகரத்தின் எல்லைப்பகுதியில் இந்த மதுபான உற்பத்திக்கூடத்திற்கு அந்நாளிலேயே எட்வர்ட் டையர் மூலம் இங்கிலாந்திலிருந்து உபகரணங்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

ஊற்று நீர்கள் அதிகம் கிடைக்கும் பகுதி என்பதோடு பொருத்தமான பருவநிலை நிலவும் இடம் என்பதால் அவர் இந்த இடத்தை தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது கொண்டுவரப்பட்ட இயந்திரங்களில் தாமிரக்கொள்கலங்கள் மட்டும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்காட்ச் விஸ்கிக்கு இணையான மால்ட் விஸ்கியை இந்தியாவில் தயாரிக்கும் நோக்கத்துடன் இந்த மதுபான உற்பத்திக்கூடத்தை எட்வர்ட் டையர் துவங்கியுள்ளார். மால்ட் விஸ்கி மற்றும் இந்தியா பேல் ஏல் ஆகிய இரண்டு மதுபானவகைகள் இங்கு தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆசியாவிலேயே மிகப்பழமையான மதுபான உற்பத்திக்கூடமாக இந்த கசௌலி புரூவரி இன்றும் இயங்கி வருகிறது.

ஆரம்ப காலத்தில் இது டையர் புரூவரிஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வந்துள்ளது. பின்னர் மீகின் புரூவரிஸ் லிமிடெட் எனும் நிறுவனத்துடன் இணைந்து டையர் மீகின் புரூவரிஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இந்த நிறுவனம் மோகன் மீகின் லிமிடெட் என்று அழைக்கப்படுகிறது. டிப்ளமாட் டீலக்ஸ் விஸ்கி, ஓல்ட் மாங்க் ரம், லண்டன் டிரை, கர்னல்’ஸ் ஸ்பெஷல், கப்லான்ஸ்கி வோட்கா மற்றும் சம்மர் ஹால் போன்றவை இந்த நிறுவனத்தின் பிரபலமான மதுபான பிராண்டுகளாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat