கிறிஸ்ட் சர்ச், கசௌலி

கிறிஸ்ட் சர்ச் எனும் தேவாலயம் கசௌலி நகரத்தின் முக்கிய ஆன்மீகத்தலங்களில் ஒன்றாக மால் ரோடு சாலையில் வீற்றுள்ளது. இந்த புராதனமான தேவாலயம் 1884ம் ஆண்டு காத்திக் கட்டிடக்கலை அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

செயிண்ட் ஃப்ரான்சிஸ் மற்றும் செயிண்ட் பர்னாபாஸ் ஆகியோருக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த தேவாலயம் கசௌலி மலை நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பெயர் பெற்றுள்ளது.

இந்த கம்பீரமான தேவாலயம் ஒரு சிலுவையைப்போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மணிக்கூண்டு மற்றும் சூரியக்கடிகாரம் போன்றவற்றையும் இது கொண்டுள்ளது. மேலும், 1850ம் ஆண்டுகளைச்சேர்ந்த பழைய கல்லறைகளைக்கொண்ட ஒரு கல்லறை மைதானமும் இந்த பகுதியில் அமைந்துள்ளது.

1970 ம் ஆண்டு வரையில் இந்த சர்ச் இங்கிலாந்து சர்ச் சபையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. அதன் பின்னர் இது சர்ச் ஆஃப் நார்த் இந்தியா அல்லது சி.என்.ஐ எனப்படும் சபையின் நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது. ஜோசப் மற்றும் மேரியால் ஏந்தப்பட்டு காட்சியளிக்கும் அழகிய ஏசுகிறித்து சிலை ஒன்று இந்த தேவாலயத்தின் விசேஷ அம்சமாக விளங்குகிறது.

Please Wait while comments are loading...