கசௌலி நகரத்தில் ஒரு முக்கியமான ஷாப்பிங் பகுதியாக இந்த மால் ரோடு பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள அப்பர் மால் ரோடு மற்றும் லோயர் மால் ரோடு ஆகிய சாலைகளில் இயற்கை அழகை ரசித்தபடியே பயணிகள் வேடிக்கை உலா சென்று வரலாம். கசௌலி நகரத்தின் சந்தடி மிகுந்த இடமாக அறியப்படும் இந்த மார்க்கெட் பகுதிக்கு ஏப்ரல் – ஜுன் மற்றும், செப்டம்பர் முதல் ஜனவரி வரையான மாதங்களில் விஜயம் செய்வது சிறந்தது.
கிறிஸ்ட் சர்ச்சில் துவங்கி மங்கீ பாயிண்ட் வரை நீளும் இந்த மால் ரோடு சாலையில் ஏராளமான உணவகங்கள் உள்ளன. மரம் மற்றும் உலோகத்தாலான கைவினைப்பொருட்கள், உள்ளூர் கலைப்பொருட்கள், உல்லன் உடைகள் மற்றும் திபெத்திய தரைவிரிப்புகளை இப்பகுதியில் பயணிகள் வாங்கலாம்.
இதுதவிர திபெத்தியன் மார்க்கெட் மற்றும் ஓல்ட் பஜஅர் போன்ற இடங்களிலும் பயணிகள் ஷாப்பிங் செய்யலாம். இங்கு உல்லன் துணிகள் மற்றும் ஞாபகார்த்த பொருட்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. மால் ரோடு பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications