காமாஷி தேவி கோயில் மஹாஜன்பூர் எனும் நகரத்திற்கு மேற்கே 10 கி.மீ தூரத்தில் கம்பீர புர்ப் எனும் கிராமத்திலுள்ள ஒரு குளக்கரையில் அமைந்துள்ளது. மஹாஜன்பூர் நகரம் கௌசாம்பி மாவட்டத்தின் நிர்வாக தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெகு தூரத்திலிருந்தும் வரும் யாத்ரீக பக்தர்கள் வணங்கும் ஒரு முக்கியமான கோயிலாக இந்த காமாஷி தேவி கோயில் வீற்றிருக்கிறது.
வேண்டிய வரங்களை எல்லாம் அருளும் இஷ்ட தெய்வமாக இந்த காமாஷி தேவியை பக்தர்கள் பூஜிக்கின்றனர். எனவே வருடமுழுதும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்தவண்ணம் உள்ளனர்.



Click it and Unblock the Notifications