Search
  • Follow NativePlanet
Share

கீச்சன் - இளநாரைகளின் புகலிடமாய் திகழும் பாலைவன கிராமம்

7

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகருக்கு மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அழகிய பாலைவன கிராமம் கீச்சன். இந்த கிராமத்தை தேடி உலகம் முழுவதுமிருந்து ஒவ்வொரு பனிக் காலத்திலும் வரும் புலம்பெயர் இளநாரைகளை பார்பதற்காக இங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற பறவைகளின் புகலிடம்

சில வருடங்களுக்கு முன்பு பறவைகளை நேசிக்கும் மார்வாடி இனத்தை சேர்ந்த  ஒருவரும், ஒரு சில கிராம மக்களும் சேர்ந்து கீச்சன் கிராமத்துக்கு  வரும் பறவைகளுக்கு தானியங்களை ஊட்ட துவங்கினர்.

இதன் காரணமாக குர்ஜா என்று அழைக்கப்படும் இளநாரைகளின் கூட்டம் இங்கு பெருக தொடங்கியது. அன்றிலிருந்து தொடர்ந்து கீச்சன் கிராம மக்கள் இந்தப் பறவைகளுக்கு உணவளித்து வருகின்றனர். இன்றளவில் 5000 கிலோ தானியங்கள் இந்த நாரைகளுக்கு உணவாக தினந்தோறும் அளிக்கப்பட்டு வருகின்றன.

'பேர்டிங் வேர்ல்ட்' என்ற புகழ்பெற்ற பத்திரிக்கையில் கீச்சனை பற்றி 'கீச்சன் - இள நாரைகளின் கிராமம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பிரசுரமானதிலிருந்து இந்த கிராமம் சர்வதேச அங்கீகாரத்தை பெறத் துவங்கியது.

கீச்சன் கிராமத்தில் செயல்பட்டு வரும் குர்ஜா சம்ரக்ஷன் விகாஸ் சன்ஸ்தான் மற்றும் பக்ஷி சுகா கர் என்ற அமைப்புகள் புலம்பெயர்ந்து வரும் இவ்வகை நாரைகளை பராமரிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் கிராம மக்களிடமிருந்தும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்தும் நன்கொடைகள் வாங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மார்வாடி நாரைகள் அறக்கட்டளை என்ற அமைப்பும் இந்த பறவைகளை பாதுகாக்கும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ளது.

கீச்சன் கிராமம் தற்போது சுற்றுலா ஸ்தலமாக ராஜஸ்தான் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச நாரைகள் அறக்கட்டளையின் இயக்குனர் இந்த கிராமத்துக்கு அடிக்கடி வந்து பறவைகளை பார்வையிட்டுச் செல்கிறார்.

கீச்சனை எப்படி அடைவது?

கிச்சன் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் விமான நிலையமும், 4.5 கிலோமீட்டர் தூரத்தில் பலோடி ரயில் நிலையமும் அமைந்திருக்கின்றன. அதேபோல இந்த கிராமத்தை சாலை மூலமாகவும் சுலபமாக அடையலாம்.

கீச்சன் சிறப்பு

கீச்சன் வானிலை

சிறந்த காலநிலை கீச்சன்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கீச்சன்

  • சாலை வழியாக
    ராஜஸ்தானின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சாலை வழியாக சுலபமாக கீச்சன் கிராமத்தை அடைந்து விட முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கீச்சன் கிராமத்துக்கு வெகு அருகில் 4.5 கிலோமீட்டர் தொலைவில் பலோடி ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் டெல்லி-ஜேவாக்கர் மற்றும் பிக்கனேர்-ஜெய்சல்மேர் அகல ரயில் பாதை வழியில் இருப்பதால் ஜோத்பூர், ஜெய்சல்மேர் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு பலோடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கீச்சன் கிராமத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்துக்கு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் மற்றும் ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையங்களிலிருந்து தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்துசேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக கீச்சன் கிராமத்தை அடைந்து விடலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue