இந்த ‘மலைப்பகுதி காட்டு முகாம்’ கொடலா கிராமப்பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இந்த முகாம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
புதிய மலையேறிகளுக்கும், அனுபவசாலிகளுக்கும் ஏற்ற வகையில் மலையேற்றப் பயணங்களை ஏற்பாடு செய்து தருவது இந்த முகாமின் சிறப்பம்சமாகும். அழகான சஹயாத்திரி மலைப்பகுதியில் இந்த மலையேற்ற ஸ்தலங்கள் அமைந்துள்ளன.
மேலும், மலையேற்றம் மட்டுமல்லாது இந்த முகாமானது ஜீப் காட்டுச்சுற்றுலா மற்றும், நீர்வீழ்ச்சியில் கயிறு மூலம் இறங்குவது, மலைப்பாதையில் சைக்கிள் பயணம் போன்ற தீவிர சாகச பொழுதுபோக்கு அம்சங்களையும் பயணிகளுக்கு அளிக்கின்றது.
இந்த மலைப்பகுதி காட்டு முகாமானது மலைஇறக்கம், மலையேற்றம் போன்றவற்றில் ஈடுபட விரும்பும் சாகச விரும்பிகளுக்கான ஒரு முக்கியமான கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications