தனித்தன்மையான கட்டிடக்கலை அமைப்புகள் மற்றும் பாரம்பரிய சூழல் போன்றவற்றை கொண்டுள்ள புராதன யூத குடியிருப்புப்பகுதிக்கு பயணிகள் மறக்காமல் விஜயம் செய்வதும் அவசியம். மற்ற இந்திய நகரங்களிலிருந்து வேறுபட்டு கொச்சி ஒரு வித்தியாசமான நகரமாக தோன்றுவதற்கு இங்குள்ள யூத குடிமக்களின் இருப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.
கி.மு 700 நூற்றாண்டு காலத்திலேயே வணிகம் மற்றும் தொழில் நோக்கங்களுடன் கொச்சிக்கு வருகை தந்துள்ள இந்த இனத்தார் காலப்போக்கில் கொச்சியின் முக்கிய கலாச்சார அங்கமாகவே உருவெடுத்துள்ளனர். அப்போதைய ஆட்சியாளர்களால் இவர்களுக்கு தனியான குடியிருப்புப்பகுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதுவே இப்போது ‘ஜ்யூ டவுன்’ அல்லது யூத நகர்ப்பகுதி என்று அழைக்கப்படுகிறது. டச்சு அரண்மனை மற்றும் பரதேஸி எனப்படும் சைனகாக் யூத தேவாலயம் இரண்டும் இப்பகுதியில் பார்க்கவேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
இங்குள்ள தெருக்களில் அமைந்துள்ள சிறு கடைகளில் பலவிதமான வாசனை பொருட்கள் விற்கப்படுகின்றன. இங்குள்ள பல பழமையான வீடுகளின் முன்பகுதிகளில் யூத பெயர்களையும் பயணிகள் பார்க்கலாம்.
இந்த பழமையான தனித்தன்மையான வீடுகள் மற்றும் தெருக்கள் நம்மை கடந்துபோன யூத நாகரிக காலகட்டத்துக்குள் இழுக்கின்றன. பலவிதமான நினைவுப்பொருட்கள், கைவினைப்பொருட்கள், புராதன பொருட்கள் போன்றவை இப்பகுதியில் விற்கப்படுவதால் பயணிகள் ஷாப்பிங் செய்யவும் இந்த யூத குடியிருப்புப்பகுதி ஏற்றதாக உள்ளது.



Click it and Unblock the Notifications