பிரசித்தமான ஹில் மியூசியத்தின் ஒரு அங்கமாக இந்த பரிஷத் தம்புரான் மியூசியம் அமைந்துள்ளது. மிக தனித்தன்மை வாய்ந்த கலைப்பொருட்களுக்காக இது சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. முகலாய வண்ண மை ஓவியங்கள் மற்றும் புராதன சிலைகள் இவற்றில் அடங்குகின்றன.
இவை தவிர, புராதன நாணயச் சேகரிப்புகளையும் இந்த மியூசியம் கொண்டுள்ளது. இந்த மியூசித்திற்கு விஜயம் செய்வதன் மூலம் இளம் தலைமுறையினர் அக்காலத்திய கேரளப்பாரம்பரியம் மற்றும் கலை ரசனை பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் அதிக அளவில் இந்த மியூசியத்திற்கு விஜயம் செய்து வரலாற்றுக்காலம் குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தினமும் சில மணி நேரங்கள் மட்டுமே இந்த மியூசியம் திறக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அனுமதி நேரம் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு இங்கு விஜயம் செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications