கொச்சியிலுள்ள சந்தானகோபால கிருஷ்ணஸ்வாமி கோயிலானது இந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுக்குறிப்புகளின்படி இது கி.பி 947ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பது தெளிவாக புலனாகிறது. இப்படி பழமையான பின்னணியைக்கொண்டுள்ளதால் அதிக அளவில் பக்தர்களும் பயணிகளும் இந்த தென்னிந்தியக் கோயிலை தரிசிக்க வருகை தருகின்றனர்.
எர்ணாகுளம் டவுன் பகுதியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த புராதனக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள தத்ரூப சிலைகள் மற்றும் கலையம்சம் மிளிரும் உட்புற வெளிப்புற கட்டுமானங்கள் போன்றவை ஒவ்வொரு பயணிக்குள்ளும் உள்ள வரலாற்று ரசனைக்கு ஏற்றவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
விஷ்ணு பஹவானின் ஒரு அவதாரமான சந்தானகோபால மூர்த்தி இங்கு மூலவராக வீற்றுள்ளார். சந்தானகோபாலமூர்த்தி எனும் பெயருக்கு குழந்தைகளை காக்கும் கடவுள் என்பது பொருளாகும். கொச்சி நகரின் பல பகுதிகளிலிருந்தும் இந்த கோயிலுக்கு செல்வதற்கு வாகன வசதிகளும் பேருந்து வசதிகளும் உள்ளன.



Click it and Unblock the Notifications