கொடுங்கநல்லூரில் அதிகம் விஜயம் செய்யப்படும் ஆன்மிக திருத்தலங்களில் இந்த கீழ்த்தலி மஹாதேவா கோயிலும் ஒன்று. திருச்சூர் மாவட்டத்திலுள்ள இக்கோயில் பல நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ளது.
இதன் வடிவமைப்பும் பழமையும் கண்ணைக் கவர்வதாக உள்ளது. மஹாதேவன் என்று பெயரில் அறியப்படும் சிவபெருமான் இந்த கோயிலில் குடிகொண்டுள்ளார். கேரளாவின் எல்லாப்பகுதியிலிருந்தும் மக்கள் இந்த கீழ்த்தலி மஹாதேவா கோயிலை தரிசிக்க வருகை தருகின்றனர்.
இந்த கோயிலின் கருவறையிலுள்ள ஒரு பிரம்மாண்ட சிவலிங்கம் இதன் விசேஷ அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. 8 அடி உயரமும் 7.5 அடி விட்டமும் கொண்ட இந்த சிவலிங்கம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாகும்.
சூரிய அஸ்தமனம் பின்னணியில் காட்சியளிக்க வரிசையாக எரியும் தீபங்களுடன் இந்த கோயில் ஜொலிக்கும் காட்சி தரிசனம் செய்ய வேண்டிய ஒரு அற்புதக்காட்சியாகும். ஒரு மலையின் மீது இந்த கோயில் வீற்றிருப்பதால் இங்கிருந்து சுற்றிலுமுள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க முடிவது கூடுதல் விசேஷமாகும்.



Click it and Unblock the Notifications