Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » ஈர்க்கும் இடங்கள் » நாகா பஜார்

நாகா பஜார், கோஹிமா

26

கோஹிமாவிற்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் ரசித்து ரசித்து விருப்பமான பொருட்களை வாங்கச் செய்யும் சுற்றுலா தலமாக நாகா பஜார் அல்லது கோஹிமாவின் உள்ளூர் சந்தை விளங்குகிறது.

கோஹிமா நகரத்தைப் போலவே மிகவும் பழமையான சந்தையாக இது விளங்குகிறது. நகரத்தின் மையத்தில் இருக்கும் இந்த சந்தை கால்நடைகளின் விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.

இந்த சந்தைகளில் விற்கப்படும் அனைத்து வகையான உயிரினங்களையும் உள்ளடக்கியதாக, நாகா உணவு வகைகள் இருப்பதால் தான் வட கிழக்கு இந்தியாவின் பிற பழங்குடியின மக்களை விட நாகா பழங்குடியினர் வித்தியாசமானவர்களாக உள்ளனர்.

கால்நடைகள் மட்டுமல்லால், பல்வேறு விற்பனையாளர்களும் மாறுபட்ட வகையிலான மீன்கள், நாகா கருவிகள் மற்றும் கலைப்பொருட்களையும் இங்கு விற்று வருகின்றனர்.

இந்த சந்தைக்குள் நீங்கள் ஒருமுறை நடந்து செல்லும் போது உள்ளூர் மக்களுடன் கலந்து, அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

பிற பழங்குடியின மாநிலங்களைப் போலவே எண்ணற்ற பெண்கள் விற்பனையாளர்களாக, அதுவும் அவர்களின் பழங்குடியின பாரம்பரிய ஆடையுடன் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்றுக் கொண்டிருப்பதையும் இங்கு காண முடியும். இவையனைத்திற்கும் மேலாக, நாகா பஜார் மெதுவாக நவீன சந்தையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed