கேதார்நாத் என்று அழைக்கப்படும் ஜோதிபா ஆலயம் 3000 அடி உயரத்தில் கோலாப்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள பனிரெண்டு புனித ஜோதி லிங்கங்களில் இது ஒன்றாகும்.இந்த ஜோதிபா ஆலயம் வட ரத்னகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
ரத்னாசுரன் எனும் அசுரனைக்கொன்ற பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ்வரன் என்னும் மூன்றும் கடவுள்களும் எழுந்தருளியுள்ள புனித இடம் இந்த கோயில் என்றும் இந்து ஐதீகம் கூறுகிறது.
கோலாப்பூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஆன்மீக யாத்ரீக ஸ்தலம் பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சித்திரை விசாக பௌர்ணமிகளில் இங்கு விசேஷமான திருவிழாக்கள் போன்று வைபவங்கள் கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications