கொல்லூர் வருகை தரும் பயணிகள் அவசியம் காண வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த அரிஷ்ணா குந்தி நீர்வீழ்ச்சி ஆகும். மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயத்தில் இந்த நீர்விழ்ச்சி அமைந்துள்ளது.
மலை ஏற்றத்தின் மூலமாக மட்டுமே பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றடைய முடியும். மேலும் பயணிகள் மேலே ஏறுவதற்கு வனத்துறையினரின் முன் அனுமதியை பெற வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீர்வீழ்ச்சியில் சூரியக்கதிர்கள் பட்டு மஞ்சள் நிறத்தில் ஜொலிப்பதால் இதற்கு இப்படி ஒரு பெயர் வந்துள்ளது. பயணிகள் இந்த நீர் வீழ்ச்சிக்கு கோடை மற்றும் குளிர் காலங்களில் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications