கொப்பல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று இந்த கின்னல் நகரம். கைவினைப்பொருட்களை வாங்குவதற்காக இங்கு வருடந்தோறும் பயணிகள் அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர். மக்கள் தொகை குறைவாக இருந்தபோதிலும் இங்குள்ள மக்கள் பயணிகளை அன்போடு வரவேற்கின்றனர்.
கைவினைப்பொருட்கள் தவிர்த்து பாரம்பரியமான வண்ண ஓவிய கலைப்பொருட்களுக்கும் இந்த நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்குள்ள மக்கள் பின்னல் வேலை, மண் கலைப்பொருட்கள் தயாரிப்பு, சீப்பு செய்தல் போன்ற பல கைவினைத்தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பதை பயணிகள் கண்கூடாக காணலாம். மேலும் அவர்கள் தங்கள் தொழில் குறித்து பயணிகளுக்கு ஆர்வத்துடன் விளக்கவும் செய்கின்றனர்.
கொப்பல் மாவட்டத்தில், கொப்பல் தாலுக்காவிலேயே அமைந்துள்ள இந்த கின்னல் நகரம் நல்ல சாலை இணைப்புகளை கொண்டுள்ளது. பெங்களூர் நகரத்திலிருந்து இது 305 கி.மீ தூரத்தில் உள்ளது. ரயில் அல்லது பஸ் மூலமாக சுலபமாக கின்னலை அடையலாம். பொம்மைகள் மற்று வண்ண ஓவிய கலைப்பொருட்களை மிக குறைந்த விலையில் இங்கு வாங்கலாம்.



Click it and Unblock the Notifications