கோட்டா நகரத்திலிருந்து ராணா பிரதாப் சாகர் செல்லும் வழியில் 45 கி.மீ தூரத்தில் பரோலி எனும் இந்த அழகிய இடம் அமைந்துள்ளது. அழகும் அமைதியும் நிரம்பிய இந்த ஸ்தலம் நாடெங்கிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஈர்க்கிறது.
இந்த ஸ்தலம் இங்குள்ள பழமையான கடேஷ்வரர் கோயிலின் அழகுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. காலங்களை கடந்து அழியாமல் நிற்கும் இக்கோயிலின் சன்னதியிலுள்ள சில சிலைகள் மட்டும் பாதி சிதைந்த நிலையில் காட்சியளிக்கின்றன.
இங்குள்ள மண்டபவாயிலில் அற்புதமான நடராஜர் சிலை காணப்படுகிறது. மேலும், இங்குள்ள தூண்களில் ராஜஸ்தானிய கலையம்சம் மற்றும் கைவினைத்திறன் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications