1699ம் ஆண்டு பாவ்ரி வம்சத்தைச்சேர்ந்த ராவ் எனும் மன்னரின் இளைய ராணியான நாதவதி என்பவரால் இந்த ‘ராணிஜி கி பாவ்ரி’ படிக்கிணறு கட்டப்பட்டுள்ளது. 165அடி ஆழம் உடைய இந்த கிணறு நான்கு தூண்களுடன் கூடிய குறுகிய வாசலைக் கொண்டுள்ளது.
இங்கு யானைச்சிற்பங்கள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இதன் படிகள் மற்ற கிணறுகளைக்காட்டிலும் அளவில் பெரியதாக காணப்படுகிறது. பாம்பு போன்று நெளிந்து நெளிந்து தோற்றமளிக்கும் அலங்கார தோரண வடிவமைப்புகளையும் இங்கு பயணிகள் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications