லாங்வுட் ஷோலா என்ற பெயரைக் கேட்டவுடன் இரண்டு பெயர்கள் அல்லது வனவிலங்கு வகைகள் நினைவுக்கு வரும்: ஒன்று இந்தியன் பைசன் என்று அழைக்கப்படும் ஒருவகை காட்டு எருமை , மற்றொன்று பறக்கும் நரி வகை.
கோத்தகிரியில் அமைந்துள்ள இயற்கையிலேயே பசுமையான் காடாகிய லாங்வுட் ஷோலா இவ்விரு அரியவகை விலங்கினங்களுக்கும் உறைவிடமாக விளங்குகிறது. இங்கு மேலும் பல அறிய வகை மிருகங்கள் மற்றும் பறவைகள் உள்ளன.
அழியும் நிலையில் உள்ள நீலகிரியின் சுற்றுச்சூழலை நிலைப் படுத்துவதில் இவ்விடம் முக்கிய காரணியாக விளங்குகிறது. அரிய மற்றும் அருகிவரும் பல பறவை மற்றும் விலங்குகளின் உறைவிடமாக இருப்பதால் இவ்விடம் பறவைகளை கண்டு ரசிக்க ஏற்ற இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications