கோவளம் கடற்கரைப்பகுதியிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இந்த சௌரா ஒரு மீன்பிடி கிராமமாகும். இது விழிஞ்சம் பகுதியின் தென்கோடியில் உள்ளது. பல கிலோமீட்டர்கள் நீண்டு கிடக்கும் வெண்பரப்புடன் கூடிய கடற்கரையை இங்கு காணலாம்.
பயணிகள் இங்கு கால் சோரும் வரை கடற்கரை நடைப்பயணம் மேற்கொள்ளலாம். இதற்கு அடுத்ததாக அழிமலத்துறா பீச் என்ற மற்றொரு நீண்ட கடற்கரையும் உள்ளது.
சுற்றுலாப்பயணிகள் நடந்தோ அல்லது வாடகை ஸ்கூட்டர்கள் மூலமோ இந்த கிராமப்பகுதியை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம். கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் இங்கு வாடகைக்கு கிடைக்கின்றன.
இங்குள்ள மலையில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலும் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. இக்கோயிலில் நவம்பர் மாதம் 15ம் தேதி துவங்கி 56 நாட்களுக்கு ஒரு திருவிழா அனுஷ்டிக்கப்படுகிறது. ஜனவரி 15ம் நாள் முடியும் இந்த திருவிழாவில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
பழமையும் நவீன அம்சங்களும் ஒருங்கே சேர்ந்து காட்சியளிக்கும் இந்த கிராமத்தை சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்தால் இதன் அருமையை புரிந்துகொள்ளலாம்.



Click it and Unblock the Notifications