Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » ஈர்க்கும் இடங்கள் » ஹவா பீச்

ஹவா பீச், கோவளம்

39

இந்த ஹவா பீச் கடற்கரை ‘ஈவ்ஸ் பீச்’ என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. அக்காலத்தில் ஏராளமான ஐரோப்பிய பெண் சுற்றுலாப்பயணிகள் இங்கு மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபடும் வழக்கத்தை கொண்டிருந்ததால் இப்பெயர் வந்துள்ளது.

இருப்பினும் தற்போது இந்த வழக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. ஸ்படிகம் போன்ற நீர்ப்பரப்பு மற்றும் பின்னணியில் பசுமையான தென்னந்தோப்புகள் ஆகியவற்றுடன் பிரமிக்கவைக்கும் இயற்கை எழிலை இக்கடற்கரை கொண்டுள்ளது.

இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் இப்பிரதேசத்தின் அழகானது சொர்க்கம் போன்ற மயக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் காட்சியளிக்கிறது. பொதுவாகவே இரவு நேரத்தில் இக்கடற்கரை முற்றிலும் வேறுபட்ட அழகுடன் மிளிர்கிறது.

லைட் ஹவுஸ் பீச் பகுதியின் சந்தடி மற்றும் ஜனநடமாட்டங்களை தவிர்க்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தரலாம். இந்த கடற்கரையானது அமைதி மற்றும் ஏகாந்தத்துடன் பயணிகளை வரவேற்கிறது. விருப்பமான துணையுடன் தனிமையில் நேரத்தை கழிக்கவும் இது மிகவும் ஏற்ற எழிற்சூழலாகும்.

லைட் ஹவுஸ் பீச்’ கடற்கரைக்கு மறுபுறம் இந்த ‘ஹவா பீச்’ கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் அலைகள் வலிமையாக எழுவதால் இங்கு பயணிகள் நீந்திக்குளிக்க முடியாது.

எனவே கடலில் குளிக்க விரும்பாத பயணிகள் நேரடியாக இந்த கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue