Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » ஈர்க்கும் இடங்கள் » லைட் ஹவுஸ் பீச்

லைட் ஹவுஸ் பீச், கோவளம்

39

கோவளம் கடற்கரைப்பரப்பின் தெற்குப்பகுதியில் இந்த லைட் ஹவுஸ் பீச் அமைந்துள்ளது. நகரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளதால் இது அதிகமாக சுற்றுலாப்பயணிகள் புழங்கும் ஸ்தலமாக காணப்படுகிறது.

முற்காலத்தில் இந்த கடற்கரைக்கு அருகிலுள்ள குன்றின்மீது விழிஞ்சம் லைட் ஹவுஸ் என்ற கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது. இது துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த கலங்கரை விளக்கத்தை அடையாளமாக கொண்ட இக்கடற்கரைக்கு ‘லைட் ஹவுஸ் பீச்’ என்று துவக்க காலத்தில் இங்கு விஜயம் செய்த ஐரோப்பியப்பயணிகள் பெயர் வைத்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, காலத்தின் தாக்கமோ, இயற்கையின் சீற்றமோ இந்த கலங்கரை விளக்கத்தை பாதிக்காமல் இது இன்னமும் கம்பீரமாக வீற்றிருக்கிறது. இரவு நேரத்தில் இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வெளிச்சக்கீற்றுகள் கடற்கரையின் எழிலுக்கு இன்னும் கூடுதல் கவர்ச்சியை அளிக்கின்றன. இக்காட்சியை கண்டு ரசிப்பதற்காகவே இரவு நேரத்தில் இந்த ஸ்தலத்துக்கு ஒரு முறை வருவது சிறந்தது.

இந்த கடற்கரையின் நீர் தூய்மையாக காணப்படுவதால் பயணிகள் இங்கு நீந்திக்குளித்து மகிழலாம். ஜனவரி மாதக்குளிரிலும் இங்கு கடற்கரை நீர் வெதுவெதுப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri