கோழிக்கோடு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த கக்காயம் எனும் இயற்கை வனப்பு நிரம்பிய அணைப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள அரிய தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ள இந்த ஸ்தலம் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளையும், நடைபயணிகளையும் ஈர்த்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்த அணைப்பகுதியை சுற்றிலும் அடர்த்தியான வனப்பகுதி காணப்படுகிறது.
வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கானகப்பகுதியில் பல அருமையான நடைப்பாதைகள் உள்ளன. இங்குள்ள கக்காயம் நீர்த்தேக்கப்பகுதி பிக்னிக் பிரியர்களுக்கும் சாகச சுற்றுலா ஆர்வலர்களுக்கும் பிடித்த இடமாக உள்ளது.
எங்கு பார்த்தாலும் பசுமைப்போர்வையுடன் ரம்மியமான சூழலுடன் காட்சியளிக்கும் இப்பிரதேசம் குடும்பச்சுற்றுலா, சாகசப்பயணம் மற்றும் ஒருநாள் பிக்னிக் போன்றவற்றுக்கு மிகவும் ஏற்றது.
கக்காயம் பகுதியை நகரத்திலிருந்து சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். கோழிக்கோடு வெளியூர் பேருந்து நிலையத்திலிருந்து கக்காயம் வருவதற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. டாக்ஸிகள் மூலமாகவும் பயணிகள் இந்த சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications