கோழிக்கோடு நகரத்தின் பிரசித்தமான சுற்றுலா அம்சங்களுள் ஒன்றான இந்த கிருஷ்ண மேனன் மியூசியம் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஈஸ்ட் ஹில் பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் பழசிராஜா மியூசியத்துக்கு மிக அருகிலேயே உள்ளது.
புகழ்பெற்ற இந்திய தேசியத்தலைவர்களில் ஒருவரான வி.கே. கிருஷ்ண மேனனுக்காக 1975ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்பற்ற அரசியல் தலைவராகவும் வெளியுறவுத்துறை நிபுணராகவும் விளங்கிய இவர் பயன்படுத்திய ஞாபகப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான தனி காட்சிக்கூடம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. பயணிகள் எளிதில் பேருந்து அல்லது ரிக்ஷா மூலம் சாலை மார்க்கமாக இந்த அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்யலாம்.
திங்கள் கிழமை தவிர்த்து மற்ற வார நாட்களில் இந்த கிருஷ்ண மேனன் மியூசியம் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இதில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்திய தேசியப்பாரம்பரியம் மற்றும் கலாபூர்வ வரலாற்றம்சங்களில் ஆர்வம் உள்ள பயணிகள் மறக்காமல் இந்த அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications