Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோழிக்கோடு » ஈர்க்கும் இடங்கள் » பெருவண்ணமுழி அணை

பெருவண்ணமுழி அணை, கோழிக்கோடு

29

கோழிக்கோடு நகரத்திலிருந்து 43 கி.மீ தூரத்தில் பெருவண்ணமுழி அணைப்பகுதி அமைந்துள்ளது. இயற்கைக்காட்சிகள் நிரம்பிய இந்த ஸ்தலம் பெருவண்ணமுழி எனும் சிறிய கிராமத்தில் உள்ளது.

காலிகட் நகரத்திலிருந்து பெருவண்ணமுழி அணைக்கு வருவதற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. 2 மணி நேர பயணத்தில் இங்கு பேருந்து மூலமாக வந்து சேரலாம்.

இந்த அணைப்பகுதியில் பலவிதமான சுவாரசியம் நிறைந்த அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள ஒரு செயற்கை ஏரியில் பயணிகள் படகுச்சவாரி சென்று மகிழலாம்.

சுதந்திரப்போரில் ஈடுபட்ட தியாகிகளுக்காக ஸ்மாரகா தோட்டம் என்ற பெயரில் ஞாபகார்த்தப்பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகளை குளுமையான சூழலை அனுபவித்தபடியே காலார நடக்கலாம். ஒரு முதலைப்பண்ணை மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகிவையும் இந்த அணைப்பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

90 வகையான பறவையினங்கள் வசிக்கும் இந்த பறவைகள் சரணாலயம் பறவை ஆர்வலர்களுக்கும் இயற்கை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த ஸ்தலமாக விளங்குகிறது.

பெருவண்ணமுழி அணைப்பகுதி மலபார் காட்டுயிர் சரணாலயத்தின் ஒரு அங்கமாக உள்ளதால் இங்குள்ள காட்டு உயிரினங்களும், பலவகையான தாவரங்களும் பயணிகளை பிரமிக்க வைக்கின்றன.

இது வாசனைத்தாவரங்கள் அதிகம் பயிராகும் பிரதேசம் என்பது மட்டுமல்லாமல், இங்கு ‘ இந்திய வாசனைப்பொருள் ஆராய்ச்சி மையம்’ அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் மாலை 6 மணி வரை இந்த அணைப்பகுதி பயணிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் திறந்து விடப்படுகிறது. கோடைக்காலத்தில் இந்த சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்வது சிறந்தது. மழைக்காலத்தில் இங்கு செல்வதென்பது அறவே தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue