தளியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் தென்னிந்தியாவின் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும். கிருஷ்ண பகவானின் அவதாரமாக கருதப்படும் வேணு கோபால சுவாமிகளின் சிலை இந்த அழகிய, கண்கவரும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வேணு என்றால் தெலுங்கு மொழியில் புல்லாங்குழல் என்று அர்த்தம், அதன் காரணமாகவே கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்பது போலவே இசையழகுடன் இந்த கோவில் காட்சியளிக்கிறது.
பரந்த நிலப்பரப்பில் பல்வேறு கற்களாலான பகுதிகளாகவும் மற்றும் தூண்களாலும் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோவில் பார்ப்பவரின் கண்களுக்கு இந்தியாவின் வளமையான பழமையை விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இயற்கை சூழலில் இருக்கும் இந்த கோவிலின் தரைதளம் சத்தத்தை எதிரொலிக்கும் தன்மையுடையது. இந்த கோவில் இயற்கையின் பாதையில் திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயற்கையின் ஒரு பகுதியாகவே அமைக்கப்பட்டுள்ளது. காலமும் இந்த கோவிலின் அழகை அதிகரிக்கும் ஆபரணமாகவே உள்ளது.
இந்த கோவில் காலத்தால் அழகுற பராமரிக்கப்பட்டு, தளியின் அழிக்க முடியாத பகுதியாகவும் மற்றும் இந்த தளிக்கு வரும் பார்வையாளர்களின் இதயத்தை கவரும் இடமாகவும் உள்ளது.
தேர்த்திருவிழா நடப்பதால் வேணுகோபால சுவாமி கோவில் மே மாதங்களில் களைகட்டி நிற்கும். நீங்கள் அமைதி மற்றும் சாந்தத்தை தேடுபவராக இருந்தால், தேர்த் திருவிழா நடைபெறும் மே மாதத்தில் தளிக்கு வாருங்கள்.



Click it and Unblock the Notifications