பியாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பண்டோஹ் அணை ஒரு நீர் மின்னுற்பத்தி கேந்திரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 76 மீ உயரத்தில் உள்ளது. குலு மற்றும் மனாலி பகுதிகள் இந்த நீர் மின்னுற்பத்தி நிலையத்தின் மூலமாக மின்சாரத்தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.
குல்லுவிலிருந்து மனாலிக்கு செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த அணைப்பகுதி சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்க உதவும் தளமாகவும் அமைந்துள்ளது. பக்ரா பியாஸ் மேனேஜ்மெண்ட் போர்ட் BBMB எனும் அமைப்பு இந்த அணையின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.



Click it and Unblock the Notifications