Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குலு » ஈர்க்கும் இடங்கள் » பின் வாலி நேஷனல் பார்க்

பின் வாலி நேஷனல் பார்க், குலு

38

பின் வாலி நேஷனல் பார்க் என்று அழைக்கப்படும் இந்த தேசியப்பூங்கா ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஹிமாசலப்பிரதேசத்தில் உள்ள ஒரே தேசியப்பூங்கா இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 675 ச.கி.மீ பரப்பளவில் ஒரு பனிபடர்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த தேசியப்பூங்கா 1987ம் ஆண்டில் துவங்கப்பட்டிருக்கிறது.

20 வகையான விலங்கினங்களையும் பறவைகளையும் கொண்டுள்ள இந்த தேசியப்பூங்கா அருகி வரும் இனமான பனிச்சிறுத்தையை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. பைக்கா எனப்படும் ஒருவகை முயல், சுகோர் அல்லது கௌதாரி, மரநாய், தங்கப்பருந்து, இபெக்ஸ் எனப்படும் சுருள் கொம்பு ஆடு, ஹிமாலயன் சிவப்பு மூக்கு காக்கை, மார்ட்டென் எனப்படும் தேன்கரடி, சிவப்பு நரி, பனிச்சேவல், கிரிஃப்பான் எனும் சடை நாய், தாடி வல்லூறு மற்றும் அண்டங்காக்கை போன்ற அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை இங்கு காணலாம்.

இந்த தேசியப்பூங்காவில் உள்ள தாவரவகைகளில் சுமார் 400 வகையான மரங்கள், செடிகள் மற்றும் மூலிகைத்தாவரங்கள் அடங்கியுள்ளன. இங்கு கிடைக்கும் மூலிகைகளில் அற்புத மருத்துவக்குணங்கள் உள்ளதால் இவை மருந்துத்தயாரிப்புக்கு பெரிதும் உதவுகின்றன. இந்த தேசியப்பூங்காவினுள் நுழைவதற்கு முன் பூங்கா இயக்குநரகத்தில் முன் அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri