ரகுநாத் கோயில் மணாலியில் உள்ள முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். இது ரகுநாத்ஜி எனும் தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயிலிலுள்ள விக்கிரகம் அயோத்தியிலுள்ள திரேத்நாத் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விஷ்ணுவின் அவதாரமான ராமபிரானால் இந்த விக்கிரகம் பூஜிக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. 1650ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பஹாரி கலையம்சங்களுடன் கூடிய பிரமிடு வடிவமைப்பை கொண்டுள்ளது.
உள்ளூர் மக்கள் இக்கோயிலின் தெய்வத்தை இந்த பள்ளத்தாக்குப்பகுதியின் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். ராஜா ஜகத் சிங் என்பவர் தனது பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications