ரூபி பேலஸ் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த சுல்தான்பூர் பேலஸ் குலு நகரத்தில் உள்ள ஒரு கம்பீரமான அரண்மனையாகும். 1905ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால் இதன் ஆதி அமைப்பு சேதமடைந்தபோதிலும் மீண்டும் இதன் பழைய அமைப்பிற்கு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
குலு பாணியில் வரையப்பட்ட பல குறு ஓவியங்களை இந்த அரண்மனையில் பார்க்கலாம். இமயமலை அடிவாரப்பகுதியின் நாகரிகத்துக்குரிய பஹாரி பாணி மற்றும் காலனிய கட்டிடக்கலை அம்சங்கள் போன்றவை கலந்து காட்சியளிக்கும் இந்த அரண்மனையின் வடிவமைப்பு மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது. பிரம்மாண்டமான மரத்தூண்களுடன் இந்த அரண்மனையின் வாயிற்பகுதி காட்சியளிக்கிறது.
தற்போது இந்த அரண்மனை ராஜ வம்சத்தினரின் வசிப்பிடமாகவே திகழ்கிறது. எனவே இந்த அரண்மனையில் நுழைவதற்கும் சுற்றிப்பார்ப்பதற்கும் முன் அனுமதி பெறுவது அவசியமாக உள்ளது.



Click it and Unblock the Notifications