தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க், குலு

முகப்பு » சேரும் இடங்கள் » குலு » ஈர்க்கும் இடங்கள் » தி கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்

ஜவஹர்லால் நேரு கிரேட் ஹிமாலயன் பார்க் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனும் தேசியப்பூங்கா குல்லு பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.

50 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த தேசியப்பூங்காவில் பலவகையான உயிரினங்களும் தாவரங்களும் இடம் பெற்றுள்ளன. 30 வகையான பாலுட்டி விலங்குகள் மற்றும் 300 வகையான பறவைகள் போன்றவை இங்கு வசிக்கின்றன. அழிந்து வரும் பறவையினமான வெஸ்ட்டர்ன் டிராகோபான் எனும் காட்டுக்கோழி இந்த பூங்காவில் காணப்படுகிறது.

இந்த தேசியப்பூங்காவோடு கணவார் காட்டுயிர் சரணாலயம், ரூபீ பாபா சரணாலயம் மற்றும் பின் வாலி தேசியப்பூங்கா ஆகியவையும் இணைந்து வட இந்தியாவின் மேற்கு இமயமலைப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பல்லுயிர்ச்சூழல் அமைப்பாக அறியப்படுகின்றன.

மேலும், பழுப்புக்கரடி, இபெக்ஸ், கருப்பு கரடி, கஸ்தூரி மான் மற்றும் அருகி வரும் இனங்களான பனிக்கரடி, ஹிமாலயன் தாஹிர் ஆடு போன்றவற்றை இந்த பூங்காவில் பார்க்கலாம்.  

இந்த பூங்காவின் தாவர அமைப்பில் குடைக்காடுகள், ஓக் காடுகள், அல்பைன் புதர்க்காடுகள், சப்-அல்பைன் காடுகள் மற்றும் அல்பைன் புல்வெளிகள் ஆகியவை காணப்படுகின்றன.

பெர்பெரீஸ், இன்டிகோஃபெரா, சர்கோக்கா மற்றும் விபர்ணம் போன்ற தாவரங்களையும் இங்கு பார்க்கலாம். வாசனை மற்றும் மருந்துக் குணங்கள் நிறைந்த மூலிகைச்செடிகளும் இங்கு ஏராளம் உள்ளன.

Please Wait while comments are loading...