Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்பகோணம் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம்

ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம், கும்பகோணம்

37

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் ஒரு பெருமாள் கோவிலாகும். கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது .

எனவே கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து பேருந்து மூலமாகவோ, ஆட்டோ மூலமாகவோ இக்கோவிலை சென்றடையலாம். 108 திவ்ய தேசங்கள் எனப் படும் 108 வைணவ ஆலயங்களில் ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயமும் ஒன்று.

12 ஆழ்வார்கள் தமது பாடல்களில் இக்கோவிலைப் பற்றியும் இக்கோவிலில் உள்ள பெருமாளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இக்கோவில் மிகப்பழமையானதோடு மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே உள்ள மகாவிஷ்ணுவின் ஒரே ஆலயம் இதுவாகும்.

ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் இதன் ஆன்மீக முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 147 அடி உயரமுள்ள மிகப் பிரம்மாண்டமான இராஜ கோபுரத்துடன் இக்கோவில்  கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவின் சிலையானது ஆதிசேஷன் தலைமீது படம் எடுத்துக் கொண்டு நிற்க, பெருமாளானவர் ஒரு ரதத்தின் மீது அனந்தசயன நிலையில் இருப்பதுபோன்ற சிலையாகும். இங்குள்ள தாயாரின் பெயர் கோமளவல்லித் தாயாராகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed