மம்மாதேவ் கோயில் 1460-ஆம் ஆண்டு ரானா கும்பா மகாராஜாவால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கும்பல்கர் கோட்டைக்கு கீழே நான்கு தளங்களுடன் அமைந்திருக்கிறது.
இங்கு முன்பு இருந்த கற்பலகைகளில் காணப்படும் சில மேவார் காலத்திய கல்வெட்டுகள், குஹில் காலத்தில் ஆரம்பித்து ரானா கும்பா காலங்கள் வரையிலான வரலாற்றுக் குறிப்புகளை கொண்டுள்ளன. தற்போது இந்தப் பலகைகள் உதைப்பூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மம்மாதேவ் கோயிலுக்கு வரும் பயணிகள் செல்வக் கடவுள் குபேரனின் சிலையுடன், இரண்டு நினைவுச் சின்னங்களையும் கோயிலினுள்ளே பார்க்கலாம். இந்த நினைவுச் சின்னங்கள் ரானா கும்பா மற்றும் பிருதிவிராஜ் சௌகான் மகாராஜாக்களின் நினைவாக கட்டப்பட்டுள்ளன. மேலும் கோயிலுக்கு அருகே மிகப்பெரிய அழகிய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications