Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லடாக் » ஈர்க்கும் இடங்கள் » சங்கர் கொம்பா

சங்கர் கொம்பா, லடாக்

31

சங்கர் கொம்பா, என்றழைக்கப்படும் சங்கர் மடம், லேவிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அதனால் இங்கு நடந்தே செல்லலாம். அவலோகிடேஷ்வரா  என்ற போதிசட்வாவின் சிலை (அனைத்து புத்தர்களின் இரக்க குணத்தை உள்ளடக்கியவர்) இந்த மடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த சிலைக்கு 11 தலைகள், 1000 கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கையிலும் கண்கள் இருக்கும். பாரம்பரிய கட்டிடக்கலையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மடத்தில், 'நான்கு திசை பாதுகாவலர்களின்' ஓவியங்களை நுழைவு வாயிலில் காணலாம்.

இந்த மடத்தை இங்கு வசிக்கும் வெறும் 20 புத்த துறவிகள் நிர்வாகிப்பதால், மடத்தை பார்வையிட அதிகாலை மற்றும் மாலை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மடத்தினுள் டு-காங் என்றழைக்கப்படும் அசெம்ப்லி ஹாலை அடைய இரண்டு கதவு உள்ள இடத்துக்கு படியேறி செல்ல வேண்டும்.

இந்த இடத்தின் சுவர்களிலும் கதவுகளிலும், மடல்கள், துறவிகளுக்கான விதிமுறைகள் மற்றும் திபெத்தியன் ஆண்டுக்குறிப்பேடுகள் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும்.

ஆவணங்களின் படி, இந்த மடம் ஸ்பிடுக்கை சேர்ந்த அப்பொட்டின் வாழிடமாக இருந்தது. அவருடைய அறைகள், விருந்தாளிகளின் அறைகள் மற்றும் நூலகமும் மாடியில் இருப்பதை இன்றும் பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City