டெல்டன் நம்க்யல் ராஜாவால் கட்டப்பட்ட இந்த ஷேய் மடம் லேவின் தெற்குப் பகுதியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. செம்பு மற்றும் தங்க முலாம் பூசிய புத்தர் சிலை, அமர்ந்திருக்கும் நிலையில் இங்குள்ளது. இந்த சிலை லடாக்கிலுள்ள புத்தர் சிலைகளிலேயே இரண்டாவது பெரிய சிலையாகும்.
1655-ஆம் வருடம் லாஷென் பல்க்யிகோன் என்ற டெல்டன் நம்க்யல் ராஜாவால் கட்டப்பட்ட இந்த மடம் தன் தந்தை சிங்கை நம்க்யல் நினைவால் எழுப்பப்பட்டது. இப்போது இது அழிந்த நிலையில் இருந்தாலும் ஒரு காலத்தில் இது தான் லடாக்கின் கோடை கால தலைநகரமாக இருந்தது. இந்த மடத்தை தற்போது ஹெமிஸ் மடத்தின் துறவிகள் தான் நிர்வாகம் செய்கிறார்கள்.



Click it and Unblock the Notifications