ஸ்டாக் அரண்மனைக்குள் இருக்கும் ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த கிரீடங்கள், கலைப் பொருட்கள், விலை மதிப்புள்ள கற்கள், செப்புக் காசுகள், ஆபரணங்கள், வழிப்பாடு கருவிகள், தங்கஸ் அல்லது சமயஞ்சார்ந்த திபெத்தியன் பட்டு ஓவியங்கள் மற்றும் குலச்செல்வங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அருங்காட்சியம் இந்த வட்டாரத்தின் பண்டைய கால கலையையும் பண்பாட்டையும் விளக்குவதாக இருக்கும். அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் தங்கஸ், 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இதில் புத்தரின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகள் தீட்டப்பட்டிருக்கும்.
இண்டஸ் நதிக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்த அரண்மனை, இந்த வட்டாரத்தின் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம். இது கி.பி. 1825-ஆம் ஆண்டு செப்பால் தொண்டுப் அரசரால் கட்டப்பட்டது.
இந்த அரண்மனையிலிருந்து பிரம்மாண்டமாக தெரியும் சூரிய உதயத்தையும் அஸ்த்தமனத்தையும் கண்டு களிக்கலாம். இந்த அரண்மனையை முழுவதுமாக சுற்றிப் பார்க்க 4 முதல் 5 மணி நேரம் ஆகும்.



Click it and Unblock the Notifications