குன்சும் கணவாய் திபெத்தில் குன்சும் லா என்று அறியப்படுகிறது. இது குன்சும் மலைத்தொடரில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உயரமான மலை கணவாய் ஆகும். 4590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கணவாய் மணாலியில் இருந்து 122 கிமீ தொலைவில் உள்ளது.
இந்த கணவாய் குலு பள்ளத்தாக்கு மற்றும் லாஹௌல் பள்ளத்தாக்கை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கோடு இணைக்கிறது. மேலும் சமயப் பற்று கொண்ட பார்வையாளர்கள் இந்த கணவாய் மேலே அமைந்துள்ள தேவி துர்கா கோவிலை சென்று பார்க்கலாம்.
ரோதங் கணவாயில் இருந்து 20 கிமீ சென்று கிராம்பு முனையில் இருந்து வலப்பக்கம் திரும்பினால் குன்சும் கணவாயை அடையலாம். இந்த கணவாய் வழியாக செல்லும் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய பாரா-சிக்ரி பனிப்பாறையின் கண்கொள்ளா காட்சியை சாட்சி பகரும் வாய்ப்பு கிடைக்கிறது.
இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய பனிப்பாறை. பேடல் சி.பி. அல்லது சந்திரா-பாகா, மணாலி, கிலாங்க், தார்ச்சா, பாராலாட்ச்சா லா, சார்ச்சு, தாங்க்லாங்க் மற்றும் பாங்கி பள்ளத்தாக்கு முதலியன குன்சும் கணவாய் அருகில் அமைந்துள்ள கண்கவர் இடங்கள் ஆகும்.