ராஜமச்சி நகரின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோட்டை மராத்தா மன்னர்களின் காலத்தை சேர்ந்ததாகும். கட்டிடக்கலை ஆர்வலர்கள் பார்த்த உடனேயே இது மராத்திய பாணி என்று கூறும் அளவுக்கு இதன் தோற்றம் உள்ளது.
ராஜமுச்சி சிகரங்களில் ஒன்றின் உச்சியில் இது அமைந்துள்ளதால் இந்த கோட்டை மீதிருந்து கீழே உள்ள பிரதேசங்களை நன்றாக பார்க்கலாம். பரந்த பசுமை பள்ளத்தாக்குகள், மடிந்து மடிந்து கிடக்கும் மலைகள் என்று பிரமிக்க காட்சிகள் நமக்கு இந்த கோட்டைமீதிருந்து காணக்கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications