லக்னோ நகரத்தின் பல வரலாற்றுப்பூங்காங்கள் மற்றும் வரலாற்றுச்சின்னங்களின் பட்டியலில் இந்த கௌதம் புத்தா பார்க் எனும் பூங்கா சமீபத்தில் சேர்ந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் கௌதம் புத்தர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்ததாக சொல்லப்படுகிறது.
புத்தரின் நகங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபி ஒன்று இங்கிருந்ததால் நக்லோ என்று இந்த லக்னோ நகரம் அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 1980ம் ஆண்டு 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா லக்னோ நகர வளர்ச்சிக்கழகத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இது ரூமி நுழைவாயில், பரா இமாம்பாரா மற்றும் தியாகிகள் நினைவுச்சின்னம் ஆகியவற்றுக்கு அருகே லக்னோ பழைய நகரத்தில் அமைந்திருக்கிறது. அமைதியான சுற்றுப்புறம் மற்றும் சாந்தம் நிரம்பிய சூழல் போன்றவற்றை இந்த பூங்காவில் அனுபவிக்கலாம்.
கலையம்சத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ள பூங்காத்தோட்டங்கள், நீரூற்றுகள், விளக்குத்தூண்கள், இருக்கைகள், விளிம்புத்தடுப்புகள் போன்றவற்றை இங்கு காணலாம். விதவிதமான செடிகள் மற்றும் சிறிய சிலைகளையும் இங்கு பார்க்கலாம்.
உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அனைவருமே விரும்பும் பொழுதுபோக்குத்தலமாக அமைந்திருக்கும் இந்த பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
குழந்தைகள் இங்குள்ள பல சவாரி அமைப்புகளில் விளையாடி மகிழலாம். பெரியவர்கள் இங்குள்ள கால்வாயில் படகுப்பயணம் செய்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications