Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட்

ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட், லக்னோ

59

லக்னோ நகரத்தின் பெரிய ஷாப்பிங் பகுதியான இந்த ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட் நகரின் மையப்பகுதியில் ஹஸ்ரத்கஞ்ச் எனும் பகுதியில் பரிவர்த்தன் சௌக் என்றழைக்கப்படும் இடத்திலுள்ளது.

அம்ஜத் அலி ஷா எனும் மன்னரால் 1810ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மார்க்கெட் பகுதி முன்னர் குவீன்ஸ் வே என்று அழைக்கப்பட்ட சாலையில் அமைந்திருந்தது.

இந்த சாலை ஆங்கிலேய அதிகாரிகளின் சாரட்டு வண்டிகள் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது. காலப்போக்கில் இந்த மார்க்கெட் நகரத்தின் குறுகலான தெருக்களுக்கு இடம் பெயர்ந்தது.

2010 – 11ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அழகுபடுத்தும் திட்டங்களின்கீழ் இந்த மார்க்கெட் பகுதியில் பிரகாசமான விளக்குகள் பொருத்தப்பட்டு நீரூற்றுகள் மற்றும் இருக்கைகள் போன்றவை இந்த மார்க்கெட் பகுதியில் ஏற்படுத்தப்பட்டன.

ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட் பகுதியில் பஜார்கள், ஷாப்பிங் மால்கள், நவீன ஷோரூம்கள், ஹோட்டல்கள், PVR சினிமா அரங்கு, ஃபன் சினிமா, உணவகங்கள், ஃபுட் கோர்ட் மற்றும் பிரபல நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகியவை நிரம்பியுள்ளன.

இப்பகுதியில் கிடைக்காத பொருளே இல்லை என்று சொல்லும் படியாக யாவுமே இங்கு கிடைக்கின்றன. கார்கள், நகைகள், புராதன கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள் ஆகியவற்றோடு பிரசித்தமான லக்னோ சிக்கான் துணி வகையையும் இங்கு வாங்கலாம்.

இங்கு அமைந்திருக்கும் பிக் பஜார் சூப்பர்ஸ்டோர், குர்ஜாரி கைத்தறி எம்போரியம், காந்தி ஆஷ்ரம் போன்றவற்றில் பயணிகள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் ஐந்து அடுக்குகளை கொண்ட சஹாரா கஞ்ச் மால் எனும் மிகப்பெரிய அங்காடி வளாகமும் 425000 ச.அடி பரப்பளவில் இங்கு அமைந்திருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Aug,Tue
Return On
26 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Aug,Tue
Check Out
26 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Aug,Tue
Return On
26 Aug,Wed