குக்ரெயில் ரிசர்வ் ஃபாரெஸ்ட் லக்னோ நகரின் சிவபுரி காலனிப்பகுதியில் இந்திராநகரில் அமைந்திருக்கிறது. இயற்கை எழில் மற்றும் வனவிலங்குகளை பார்த்து ரசிக்க இது ஏற்றதாக உள்ளது.
குறிப்பாக முதலைகள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன. அருகி வரும் சில முதலை இனங்கள் இங்கு வசிக்கின்றன. பெண் முதலைகள் இங்குள்ள ஆற்றங்கரையில் முட்டைகளை இட்டு செல்கின்றன.
பின் 60 முதல் 80 நாட்களில் இவற்றிலிருந்து முதலைக்குட்டிகள் வெளிவருகின்றன. 1978ம் ஆண்டில் இந்த வனப்பகுதி முதலைகளுக்கான இனப்பெருக்க ஸ்தலமாக அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கான நிதியுதவியை உத்தரப்பிரதேச வனத்துறை அளித்துள்ளது. முதலைகள் மட்டுமன்றி இந்த வனப்பகுதியில் புள்ளி மான் மற்றும் சாம்பார் மான் போன்ற மான் வகைகளையும் பார்க்கலாம். இவை தவிர பல்வகை வசிப்பிட மற்றும் புலம்பெயர் பறவைகளையும் இங்கு பார்த்து ரசிக்கலாம்.
ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த வனப்பகுதி ஒரு தேநீரகம், உணவகம் மற்றும் ஓய்வறை வசதிகளைக்கொண்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கென பூங்காக்கள் மற்றும் ஊஞ்சல்கள் போன்ற வசதிகளும் இங்கு செய்யப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications