72 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள லக்னோ ஜூ என்று அழைக்கப்படும் இந்த விலங்கியல் காட்சிக்கூடம் சிர்யாகர் எனும் முக்கியமான சுற்றுலா தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
வருடந்தோறும் 10 லட்சம் சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்வதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பலவகை விலங்குகள், பறவைகள், ஊர்வன விலங்குகள் மற்றும் பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன.
ராயல் பெங்கால் புலி, சிங்கம், ஓநாய், ஹிமாலயன் கருங்கரடி, காண்டாமிருகம், பிளாக் பக் மான், வரிக்குதிரை, மைனா, ஆசிய யானை, ஒட்டகச்சிவிங்கி, வெள்ளைப்புலி போன்றவை இங்குள்ள உயிரினங்களில் குறிப்பிடத்தக்கவை.
இந்த விலங்குக்காட்சி சாலையில் ஒரு பிரத்யேக உல்லாசப்பயண ரயிலும் உள்ளது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் உற்சாகமூட்டும் அம்சமாக காணப்படுகிறது.
ஒரு எஞ்சின் மற்றும் இரண்டு பெட்டிகளோடு இயக்கப்படும் இந்த ரயில் இந்திய ரயில்வே துறையால் விலங்குக்காட்சி சாலைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 1.5 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையில் இந்த பிரத்யேக உள்வளாக ரயில் இயக்கப்படுகிறது.
சந்தேர்புரி ரயில் நிலையத்தில் புறப்படும் இது பல நிறுத்தங்கள் மற்றும் சிக்னல்களை கடந்து விலங்குக்காட்சி சாலையின் பல முக்கிய இடங்கள் வழியாக செல்கிறது.



Click it and Unblock the Notifications