Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » ராமகிருஷ்ணா மத்

ராமகிருஷ்ணா மத், லக்னோ

59

ராமகிருஷ்ணா மத் அல்லது சேவாஷ்ரமம் என்றழைக்கப்படும் இந்த ஆசிரமம் பேலூரில் உள்ளது. இது இரண்டு முக்கியமான மையங்களை தன்னுள் கொண்டுள்ளது. விவேகானந்தா பாலிகிளினிக் எனும் மருத்துவமனை இவற்றில் முதலாவதாகும். 

இது இந்த ஆசிரம வளாகத்திற்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிக்கிறது.  சுற்றி உள்ள கிராமங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறது. 1970ம் ஆண்டு மடத்தில் தலைவராக இருந்த ஸ்வாமி வீரேஷ்வரானந்தாவால் இது துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரபல சிற்பக்கலைஞர் தேவி பிரசாத் ராய் சௌதரி வடிவமைத்த 14 அடி உயர ஸ்வாமி விவேகானந்தர் சிலை இந்த மருத்துவமனை வாசலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மடத்தின் இரண்டாவது முக்கியமான அம்சம் ராமகிருஷ்ணர் கோயிலாகும். இது நிரல்நகர் பகுதியில் ராமகிருஷ்ணா மார்க் எனும் இடத்தில் உள்ளது. இந்த கோயிலின் கம்பீரத்தில் பார்வையாளர்கள் மனதை பறிகொடுக்கின்றனர்.

கோயில் கர்ப்ப கிருக அமைப்பில் ஒன்பது கலச அமைப்புகள் உள்ளன. அவற்றில் பிரதான கலசம் 90 அடி உயரத்தில் காணப்படுகிறது. இந்த கோயிலில் ராமகிருஷ்ணர், ஷீ ஷீ மா சாரதா தேவி மற்றும் ஸ்வாமி விவேகானந்தர் சிலைகள் ஆகியவை அமைந்துள்ளன.

தாமரை, திரிசூலம், உடுக்கை, சங்கு, அன்னம் மற்றும் இடி போன்ற அம்சங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் காணப்படுகின்றன. இவை யாவும் சிவப்பு சிமெண்ட் பூச்சுடன் காட்சியளிக்கின்றன.

இந்த கோயில் 1987ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்டது. வெண் பளிங்குக்கல் மற்றும் சிவப்புக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயில் பல்வேறு கோயிற்கலை கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜைன, பல்லவ, சந்தேள, சாளுக்கிய மற்றும் முகலாய பாணி கோயிற்கலை அம்சங்கள் இதில் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed