மிசோரத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது லுங்க்லெய். இது மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ளது. இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள் தரும்.
ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது.
இந்நகரத்தை சுற்றி பல அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்கள் உள்ளது. அதனால் இங்குள்ள இயற்கை அழகை கண்டு களிக்க உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் இங்கே சுற்றுலாவிற்கு வருவார்கள்.
சோபாக் ஸ்போர்ட்ஸ் அகாடமி, காம்சவி பூங்கா, கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், சைகுடி ஹால் (கலை நிகழ்ச்சிகளும் ஓவியக் கண்காட்சிகளும் நடக்கும் ஹால்) மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற புற்தரையிலான கால்பந்து மைதானம் போன்றவைகள் தான் இங்குள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.
இது போக இங்கே பல சுற்றுலாத் தலங்களும் ட்ரெக்கிங் தலங்களும் கூட உள்ளது. ஐசவ்லிலிருந்து பேருந்து, ஜீப் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக 175 கி.மீ. தொலைவில் உள்ள லுங்க்லெய்யை அடையலாம்.



Click it and Unblock the Notifications