Search
  • Follow NativePlanet
Share

மதனப்பள்ளி - சிறப்புகள் ஏராளம் சுமக்கின்ற பூமி!

10

சீமாந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மதனப்பள்ளி, ஆரம்ப காலத்தில் மரியாதை ராமண்ணா பட்டணம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. அதன் பிறகு 19-ஆம் நூற்றாண்டின் முடிவில்தான் இந்த நகரம் மதனப்பள்ளி என்று அழைக்கப்பட தொடங்கியது.

மதனப்பள்ளி நகரின் பெயர் குறித்து கூறப்படும் சுவையான கதையை தவிர இந்த நகரம் இந்தியாவில் அதிகமாக வருவாய் ஈட்டித்தரும் பகுதியாக கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அதோடு மதனப்பள்ளி நகரம் விவசாயத் துறையில் வேகமாக வளர்ந்து வருவது பலரும் அறிந்திடாத செய்தி. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நல்ல தரத்துடன் இருப்பதால் இந்தியா முழுதும் இதற்கு கடும் கிராக்கி நிலவுகிறது.

மதனப்பள்ளி நகரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருவதற்கு மூல முதல் காரணமாக விளங்குவது  ஹார்ஸ்லி குன்றே ஆகும். அதுவும் சீமாந்திராவின் சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்கும் அற்புதமான மலைவாசஸ்தலமாக ஹார்ஸ்லி குன்று கருதப்படுவதால் ஆந்திரா மற்றும் அருகாமை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கோடை காலத்தை இந்த மலைப்பகுதியில் கழிக்கவே விரும்புகிறார்கள்.

அதோடு இந்தப் பகுதி அன்னி பெசன்ட் அம்மையாரின் நினைவாக கட்டப்பட்ட பெசன்ட் தெஸோபிக்கல் கல்லூரிக்காக மிகவும் புகழ்பெற்றது. இவைதவிர பிரசித்திபெற்ற ரிஷி வேல்லி பள்ளிக்கூடத்தை நிறுவியவரான தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறப்பிடமாகவும் மதனப்பள்ளி நகரம் பயணிகள் மத்தியில் பிரபலம்.

மதனப்பள்ளி நகரில் நடந்தேறிய  ஒரு முக்கிய நிகழ்ச்சி இந்திய வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதாவது மகாகவி ரபீந்தரநாத் தாகூர் இந்திய தேசிய கீதத்தை மதனப்பள்ளி நகரில் எழுதியதோடு, இங்கேயே அதற்கு இசை அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

மதனப்பள்ளி நகரின் பனிக் காலங்களை தவிர மற்ற பருவங்களில் மிகவும் சூடான வானிலையே நிலவும். எனவே பயணிகள் மதனப்பள்ளி நகரை சுற்றிப் பார்க்க பனிக் காலங்களே பொருத்தமானதாகவும், ஏற்றதாகவும் இருக்கும்.

மேலும் மதனப்பள்ளி நகரிலிருந்து 115, 157, 93, 125 கிலோமீட்டர் தொலைவுகளில் முறையே திருப்பதி, பெங்களூர், சித்தூர், புட்டப்பர்த்தி போன்ற நகரங்கள் அமைந்திருப்பதால் மதனப்பள்ளி நகரை அடைவது ஒன்றும் கடினமான காரியமாக இருக்காது.

மதனப்பள்ளி சிறப்பு

மதனப்பள்ளி வானிலை

சிறந்த காலநிலை மதனப்பள்ளி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மதனப்பள்ளி

  • சாலை வழியாக
    ஹைதராபாத், விஷாகப்பட்டணம் நகரங்களிலிருந்தும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் மதனப்பள்ளி நகருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மதனப்பள்ளி ரயில் நிலையம் தர்மாவரம்-சித்தூர் ரயில் பாதையில் அமைந்திருக்கிறது. இது மதனப்பள்ளி நகரின் மத்தியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு பயணிகள் பேருந்துகளிலேயோ, வாடகை கார்களின் மூலமோ மதனப்பள்ளி நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மதனப்பள்ளி நகரின் அருகாமை விமான நிலையங்களாக ஹைதராபாத் மற்றும் விஷாகப்பட்டணம் விமான நிலையங்கள் அறியப்படுகின்றன. இந்த விமான நிலையங்களிலிருந்து வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி மதனப்பள்ளி நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Sun
Check Out
27 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon