மதுரை ஜங்ஷன் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த காஜிமார் மசூதி அமைந்துள்ளது. பழமையான மசூதியான இது ஹஸ்ரத் காஜி சையத் தாஜுதீன் அவர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் இறைத்தூதர் முகமதுவின் வழித்தோன்றலாக அறியப்படுகிறார். மதுரையில் உள்ள மசூதிகளிலேயே மிக பழமையானதாக இது கருதப்படுகிறது. ஓமன் நாட்டிலிருந்து வந்த அவருக்கு பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் இந்த மசூதி அமைந்துள்ள இடத்தை கையளித்ததாக சொல்லப்படுகிறது.
பெரிய மசூதி அல்லது பெரிய பள்ளிவாசல் என்று இது பிரசித்தமாக மதுரையில் அறியப்படுகிறது. 2500 பேர் ஒரே சமயத்தில் தொழுகை புரியக்கூடிய அளவிற்கு இடவசதியை கொண்டுள்ள இம்மசூதி இப்பகுதியில் மிகப்பெரியதாகும்.
மதுரை ஹஸரத் எனும் தர்க்காவும் இந்த மசூதியின் வளாகத்திலேயே அமைந்துள்ளது. மதுரை தர்க்கா என்ற பெயரில் அது அழைக்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications