மதுரை மாநகரில் ஷாப்பிங் செய்வது ஒரு சுவாரசியமான அனுபவம் என்பதை மதுரைக்கு விஜயம் செய்தபின் புரிந்துகொள்வீர்கள். பொருட்களை வாங்குவதை விடவும் இந்த பழமையான நகரத்தின் கடைவீதிகளையும், பாரம்பரியமான அங்காடிகளையும் வேடிக்கை பார்த்தபடி நடப்பது அலுக்கவே அலுக்காது.
இங்கு ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்கள் முக்கியமான சந்தைப்பொருட்களாக உள்ளன. பட்டு, பருத்தி, பத்திக் மற்று சுங்கிடி புடவைகள் இங்கு வெகு பிரசித்தம். மதுரை சுங்கிடிப்புடவைகள் பிடிக்காத பெண்கள் வெகு குறைவு எனலாம்.
வாங்குகிறீர்களோ இல்லையோ மாலை நேரத்தில் குறுகலான இந்த மதுரை வீதிகளை வலம் வந்தால் பழமையின் லேசான ஸ்பரிசம் நம் மனதை லேசாக்கும் மாயத்தை உணரலாம். நவீனமயமாக்கலின் அடையாளங்களாக சர்வதேச பிராண்டுகளின் ஷோரூம்களும் மதுரையில் நிறைந்துள்ளன.



Click it and Unblock the Notifications