மதுரைக்கு அருகில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த திருச்சுழி ஆகும். இது யோகி ரமண மஹரிஷி அவதரித்த கிராமம் என்பதால் ஒரு புனிதத்தலமாக கருதப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த யோகிகளுள் ஒருவராக ரமணமஹரிஷி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
அவரது நினைவாக இக்கிராமத்தில் ஸ்ரீ ரமணர் ஆஷ்ரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்கான ஒரு புராதனக்கோயில் ஒன்றும் இக்கிராமத்தில் உள்ளது. ஆன்மீக அமைதிச்சூழலை விரும்பும் பயணிகளுக்கு இந்த கிராமம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications