புலிக்குகை எனப்படும் இந்த பாறைக்குடைவு கோயில் வளாகம் மாமல்லபுரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. வாயிலில் புலித்தலை சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
பல்லவர் காலத்தில் 8ம் நூற்றாண்டில் இவை வடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடற்கரையை ஒட்டியே தனிமையான சூழலை கொண்டிருப்பதால் முக்கியமான சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த கோயில் வளாகம் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.
2005ம் ஆண்டில் ஒரு கல்வெட்டு பாறை மண்ணிலிருந்து வெளிப்பட்ட பின் இப்பகுதியில் விரிவான அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு மண்ணில் புதையுண்டிருந்த புராதன சங்ககால சுப்ரமணியர் கோயிலும் இங்கு கண்டெடுக்கப்பட்டிப்பதை காணலாம்.



Click it and Unblock the Notifications