உத்திரபிரதேச மாநிலம் மஹொபா மாவட்டத்தில் உள்ள மதன் சாகர் ஏரியில் உள்ள ஒரு தீவில் உள்ள விஷ்ணு கோவிலின் அருகே கக்ரமாத் கோவில் அமைந்துள்ளது. இது இந்து மதத்தை சார்ந்த நாத் நம்பிக்கை பிரிவினாருக்காக கட்டப்பட்ட கோவிலாகும்.
இந்த நாத் நம்பிக்கை பிரிவு `பாபா கோரக்நாத்' என்பவரால் உருவாக்கப்பட்டது. அவரும் அவருடைய சீடர்களும் இணைந்து நாத் பிரிவினருக்காக கோகர் மலையின் மீது தங்குமிடத்தை உருவாக்கியுள்ளனர்.
கோவிலின் பிரமிட் போன்ற கட்டடக்கலை அமைப்பு கஜூராஹோவை ஒத்திருக்கிறது. இங்குள்ள சிற்பங்கள் சாண்டலா பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக உள்ளது.



Click it and Unblock the Notifications