பாலக்காடு நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பாரம்பரிய பெருமை வாய்ந்த அழகிய குக்கிராமமான தென்குருசி அமைந்திருக்கிறது. இந்த கிராமத்திலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் நெல்லியம்பதி எனும் அழகிய சிற்றூர் உள்ளது.
தென்குருசி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களாக தாயான்காவு கோயிலும், எலமன்னம் சங்கரநாராயணன் கோயிலும் அறியப்படுகின்றன.இவைதவிர தென்குருசியின் சிவாலயம் பாரம்பரியம் மற்றும் வரலாற்று பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தக் கோயிலில் ஐயப்பன் விளக்கு, சிவராத்திரி, திருவாதிரை, உத்திராடம், திருவோணம் போன்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications